குட்டிக்கதை


குட்டிக்கதை:

வழக்கு புலி....

பெரும் குற்றவாளிகள் 'கோயில்' கட்டவேண்டும் என்று நினைத்தால் நம்முடைய வக்கீல்'வழக்குபுலி'க்கு ஒரு கோயில் அமைந்துவிடும்..

அந்த அளவுக்கு குற்றவாளிகளை வெளியே கொண்டுவருகிற திறமை..
சட்டஞானம்..அவருக்கு உண்டு..

அவரை நம்பி இந்த குற்றத்தை செய்யலாம்..வெளியே வந்துவிடலாம் அவரிடம் பணத்தைகட்டி என்று சிலாகிப்பவரும் உண்டு...

செத்தவனை அவன் பிறக்கவேவில்லை என்றே வாதாடி அசத்துகிற திறமை உண்டு...

அவர் கோர்ட்க்குள் நுழைந்துவிட்டால் என்ன பேசுகிறார் என்று வாயில் ஈ போவது கூட பார்க்கிற வக்கீல் கூட்டம் உண்டு..

அவர் பேசி முடித்துபிறகு ஒன்னாங்கிளாஸ் படிக்காதவன் கூட இப்படித்தான் பேசியிருப்பான் ஆனால் அவர் அடி வருடி கூட்டம் இவரால் முடியும் உச்உச் கொட்டியே மாய்ந்துபோவார்கள்..

உள்ளே போகாமல் வெளியே கொலைகார.ர்களும் திருடர்களும் நடமாடுகிறார்க்ள என்றால் இவருடைய கைங்கிரயம்தான்..

அடுத்து அடுத்து குற்றங்கள் செய்கிறானே..அவருக்கு பிரசினை இல்லை..இவருக்கு காசை வெட்டிகிறானா அது போதும் அவருக்கு.

என்ன இப்படி செய்கிறீர்களே என்றால்என் தொழில் தர்.ம.ம்..என்னிடம் வந்வனை காப்பற்றவேண்டும் .எனபார்..

அவருக்கு ஒரே பெண்..செல்லபெண்..அவரின் அத்தனை பணத்துக்கும்வாரிசு..

பக்கத்து நகரத்தில் படித்துகொண்டிருந்தத்து..

அவர் ஒரு நாள் ஓரு எல்லோரும் முடிவை ஆவலோடு எதிர் பார்க்கிற வழக்கு..அதில் வாத திறமையை காட்டிகொண்டிருந்த நேரம்..

அவருடைய செல்லப்பெண் காலை நேர வாக்கிங் போனபோது நகையைபறிக்க வந்த திருடன்உடன் நடந்த போரட்டத்தின் போது குத்தப்பட்டபோது உயிரை இற..ந்துவிடுகிறார்.செய்தி வருகிறது..

நிலை குலைந்து போகிறார்.

.
நாட்டிலே ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பில்லையா..கதறுகிறார்.

.
போலீஸ் என்ன செய்கிறது ..எனகிறார்..

உடனே கண்டுபிடிக்கவேண்டும் ..எனகறார்..அவனை தூக்கில் போடவேண்டும் எனகிறார்..

முக்கிய நபரல்லவா...குற்றவாளியை கண்டுபிடித்திவிடுவோம் என்று உயர் போலீஸ்அதிகாரியே இவரிடம் பேசுகிறார்..

இவரின் அடி வருடிகளும் அவனை சும்மாவிட்கூடாது எனகிறார்க்ள...

இப்படியெல்லாம் களபேரம் நடந்துகொண்டிருக்கும்போதுஅவருக்கு போன் வருகிறது..

''
நம்ம சுல்லான் இருக்கான்லே போன தடவை இரட்டை கொலையிலே காப்பாற்றி விட்டுங்களே.. அவன் யாரோ ஒரு பொண்ணை போட்டுதள்ளிட்டானாம்..பெரிய இடத்து பொன்னாம் போலீஸ் தீவரமாக தேடுதாம்..அவனை நீங்கதான் காப்பாற்றியாகனும்..'' என்றது..

சமுதாயத்தை பாதிக்கிற செயலை செய்தால் ஒருநாள் நம்மையும் பாதிக்கும் என்பதை முதல் முதலாக உணர்ந்தார் நமது வழக்கு புலி..

No comments:

Post a Comment