2015ல் இவர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?


ஹாலிவுட் படங்கள் 1000 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கிறார்கள், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பளம் எவ்வளவு என்று பார்த்தால், தலையே சுற்றிவிடும்.

இந்த ஆண்டு 2015ல் இறுதி வாரத்திற்கு வந்துவிட்டதால், இந்த ஆண்டு உலகளவில் அதிகமாக சம்பாதித்த நடிகர் நடிகைகளின் பட்டியல் ஒரு பார்வை உங்களுக்காக இதோ,

நடிகர்கள்:-

1. ராபர்ட் டௌனி ஜூனியர் - ரூ. 500 கோடி

2. ஜாக்கி சான் - ரூ. 300 கோடி

3. வின் டீசல் - ரூ.280 கோடி

4. டாம் க்ரூஸ் - ரூ. 240 கோடி

5. அமிதாப் பச்சன் - 180 கோடி

6. சல்மான் கான் - ரூ.180 கோடி

7. அக்ஷய் குமார் - ரூ. 150 கோடி

நடிகைகள்:-

1. ஜெனிபர் லாரன்ஸ் - ரூ. 300 கோடி

2. ஸ்கார்லெட் ஜான்சன் - ரூ. 210 கோடி

3. மெலிசா மெக்கர்தி - ரூ. 130 கோடி

4. ஏஞ்சலினா ஜோலி - ரூ. 90 கோடி

உலகிலேயே அதிகமாக சம்பாதிக்கும் ஹீரோவாக அயர்ன் மேன் ஹீரோ ராபர்ட் டௌனி ஜூனியர் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் அதிரடி மன்னன் ஜாக்கி சானும் உள்ளனர்.

நடிகையரில், ஹங்கர் கேம்ஸ் படத்தில் நடித்த ஜெனிபர் லாரன்ஸ் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில், லூசி படத்தின் நாயகி ஸ்கார்லெட் ஜான்சன் இடம்பிடித்துள்ளார்.

இந்தியாவின், அமிதாப் பச்சன், சல்மான் கான், அக்ஷய் குமார் பல ஹாலிவுட் ஹீரோக்களுக்கே சவால் விடும் நிலையில் இந்த வருடம் சம்பாதித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பாடா, இப்பவே கண்ணக் கட்டுதே!

No comments:

Post a Comment