மூளைக்கு வேலை கொடு - 14

3 நண்பர்கள் ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தார்கள். உணவருந்திவிட்டு உணவுபரிமாற்றுனரிடம் (waiter) மூவரும் சமமாக செலவுத்தொகையை பிரித்துக்கொள்ளும் நோக்குடன் ஆளுக்கு 5€ படி 15€ வை கொடுத்தார்கள். உணவுபரிமாற்றுபவர் காசாளரிடம் (cashier) சென்று அதை கொடுத்தார். அவர் மீதி 5€ வைக்கொடுக்க, உணவுபரிமாற்றுபவருக்கு அதை எப்படி அவர்களிடம் பிரித்துக்கொடுப்பது என தெரியவில்லை. ஆகவே அவர் ஒவ்வொருவருக்கும் தலா 1€ கொடுத்துவிட்டு. தான் 2€ வை எடுத்துக்கொண்டார்.
என்றாலும் அவரின் மனதிற்குள் கணக்கு புரியவில்லை.
அதாவது அவர்கள் மூவரும் ஆளுக்கு 4€ படி மொத்தமாக 12€ செலுத்தியுள்ளார்கள். தான் 2€ எடுத்துள்ளார். மொத்தம் 12+2=14€. அப்படியானால்
மொத்த 15€இல் இருந்து 1€ எங்கே போனது? (15-12-2=1)

அவருக்கு உதவுங்கள் பார்க்கலாம்.
(இது பலகோணங்களில் கேட்கப்பட்ட அதே பழைய கேள்விதான்.)

No comments:

Post a Comment