இதயம் வலுவடைய


அறிகுறிகள்:

இதயம் பலவீனமாக காணப்படுதல்.
படபடப்பு.
இதயத்தில் வலி ஏற்படுதல்.

தேவையான பொருட்கள்:
மாதுளைப் பழச்சாறு.

செய்முறை:
மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.


இதய நோய்

அறிகுறிகள்:
இதயவலி.
படபடப்பு.
மூச்சுத் திணறல்.

தேவையான பொருட்கள்:
வெள்ளரிப் பிஞ்சு.

செய்முறை:
வெள்ளரிப் பிஞ்சுகள் கிடைக்கும் காலங்களில் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால் இதய நோய் குறையும்.


இதய பலவீனம்

தேவையான பொருட்கள்:
அத்திப்பழம்.
பால்.

செய்முறை:
அத்திப்பழங்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காயவைத்து கல்லுரலில் போட்டு இடித்து வஸ்த்திரகாயம் (துணியில் சலித்தல்) செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும்.


படபடப்பு

அறிகுறிகள்:
அதிகமான வியர்வை.
படபடப்பு.

தேவையான பொருட்கள்:
திராட்சைப் பழம்.
துளசி சாறு.

செய்முறை:
திராட்சைப் பழங்களை வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு துளசி சாற்றை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இதயத்தில் ஏற்படும் படபடப்பு குறையும்.



மார்பு வலி

அறிகுறிகள்:
மூச்சு திணறல்

தேவையான பொருட்கள்:
கருந்துளசி.
செம்பருத்தி பூ.

செய்முறை:

கருந்துளசி இலை, செம்பருத்தி பூ ஆகியவற்றை எடுத்த நன்கு சுத்தம் செய்து பின்பு அதை கஷாயம் செய்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

No comments:

Post a Comment