பாலூட்டும் தாய்மார்களுக்கு உபயோகமான மருத்துவக் குறிப்புகள் !!!


தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள் :-

குழந்தைக்கு
தாய்ப்பால் மற்ற உணவுகளைவிட ஒரு மேலான சத்துணவு ஆகும். தாய்ப்பால் கொடுப்பதால் பிள்ளை மற்றும் தாய் இருவரின் சுகாதார நலன்கள் பெருகும்.


•குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுப்பது மிகவும் நல்லது. அப்படி செய்வது அவசியமும் கூட, ஏனெனில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு வயிறு மற்றும் குடல் உபாதைகள் வராமல் தடுக்கும். தாய்ப்பாலானது குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது மற்றும் மலச்சிக்கல் ஏற்படுத்தாது. தாய்ப்பால் குழந்தையின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிர்ப்பு தன்மையை பெருக்கும்.

•தாய்ப்பால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதைத் தடுக்கும். ஏனெனில் தாய்ப்பாலானது மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் உள்சுவரில் நடு பாதுகாப்பு படலத்தை ஏற்படுத்துகிறது.

•பசும்பால் கொடுப்பது சில பிள்ளைகளுக்கு அலார்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. பசும்பாலோடு ஒப்பிடும்போது தாய்ப்பால் கொடுப்பது 100 சதம் பாதுகாப்பானது.

•தாய்பபால் உட்கொள்ளும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட உடற்பருமனால் சிறிதாகவே பாதிக்கப்படுகின்றன என சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் தாய்பபால் கொடுப்பதால் உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.

•தாய்ப்பால் கொடுப்பதால் லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கான்சர் சர்க்கரை நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதை தடுக்கிறது.

•தாய்ப்பால் குழந்தையின் புத்திக்கூர்மையை மேலும் உயர்த்துகிறது என நம்பப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு எற்படுகிறது. மேலும் தாய்ப்பாலில் குழந்தையின் மூலை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

•மற்ற தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களோடு ஒப்பிடும் போது குழந்தைபிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உடல்எடை குறைவு சீக்கிரம் ஏற்படுகிறது. உடல் எடை குறைவது தாய்ப்பால் கொடுக்கும் தாயின் மன அழுத்தத்தையும் மற்றும் பிள்ளைபேருக்குப்பின் ஏற்படும் உதிரப்போக்கையும் குறைக்க உதவுகிறது.

•குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் கொடுப்பதினால் பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகிறது என நம்பப்படுகிறது. நீண்ட நாட்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது மேற்க்கூறிய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு.

•தாய்ப்பால் கொடுப்பது வசதியானது, இலவசமானது (மிகவும் முறைப்படுத்தப்பட்ட, பாட்டில் உணவு மற்றும் பிறகுழந்தையின் அத்தியாவசிய தேவையான உயர்வகை உணவகளுடன் ஒப்பிடும் போது ) மற்றும் தாய்ப்பால் எல்லாவற்றிலும் சிறந்தது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்சேய் உறவில் நல்ல இணக்கத்தை ஏற்பட உதவிசெய்கிறது. தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் அந்த அணைப்பு பிள்ளைக்கு மிகவும் ஆறுதலையும் தேறுதலையும் ஏற்படுத்தும் ஒரு சிறந்த வழி.

தாய்ப்பாலூட்டலின் நன்மைகள் தாய்மார்களுக்கு:

* தாய்ப்பால் ஊட்டுவதால் உடலில் உள்ள கொழுப்புச் சத்துக் குறைந்து பிரசவத்திற்கு முன் ஏறிய உடல் எடை தானாகக் குறைந்துவிடும்.

* மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது

* தாய்க்கும் குழந்தைக்குமான அன்யோன்யம் அதிகரிக்கிறது

* பிரசவத்திற்கு பின் இருக்கும் பெருத்த வயிறும் தாய்ப்பால் ஊட்டுவதால் ஓரளவு கட்டுப்படும்
அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்காக
அலுவலகம் செல்லும் தாய்மார்களின் பெரிய பிரச்சனை குழந்தைக்கு பாலூட்டுவதும், வெகு நேரம் அலுவலகத்தில் இருப்பதால் பால் கட்டிக் கொள்வது அல்லது பால் கசிந்துக் கொண்டு ஆடையை நனைப்பது ஆகிய இரண்டுமே!

தாய்ப்பாலானது ஃபிரிட்ஜில் வைக்காமலேயே 5மணி நேரம் வரைக் கெடாமல் இருக்கும்….. அதனை ஃபிரிட்ஜில் வைத்தால் இன்னும் பாதுகாக்கலாம்…

இப்படி சேமிக்கப்பட்ட பாலை நாம் வீட்டில் இல்லாத போது நம் குழந்தைக்கு பாட்டி, தந்தை, குழந்த பராமரிப்பாளர் என குழந்தையோடு நெருங்கிப் பழகும் யார் வேண்டுமானாலும் புகட்டலாம்….

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மேனுவல் பிரஸ்ட் பம்ப் எனப்படும் கீழ்காணும் படத்தில் உள்ளக் கருவியை வாங்க வேண்டும்…. 



இந்தக் கருவியைப் பயன்படுத்தி காலை நீங்கள் அலுவலக்ம் செல்லும் முன்பு குழந்தைக்கு நன்கு பாலூட்டியதும் நீங்கள் நிறைய தண்ணீர் மற்றும் பால் குடித்துவிட்டு ஒரு 30நிமிடங்கள் கழித்து உங்கள் மார்பகத்தில் உள்ள பாலினை இந்த பம்ப் மூலம் எடுத்து வீட்டில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும், இது நீங்கள் வீட்டில் இல்லாத சமயம் குழந்தைக்குப் பயன்படும்

இதனை சேமித்து வைக்க குழந்தைக்கு பாலூட்டும் நான் டாக்ஸிக் பால் புட்டிகளையே பயன்படுத்தலாம்… இதனை ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாப்பதால் குழந்தைக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை!



எப்பொழுது தாய்ப்பால் கொடுக்க துவங்க வேண்டும்?

குழந்தை பிறந்த உடனடியாக தாய்ப்பால் கொடுக்க துவங்கிவிட வேண்டும். நன்கு ஈரத்துணியால் துடைத்து எடுக்கப்பட்ட குழந்தையை தாய் தன் மார்போடு அனைத்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் தாயின் மார்பிலிருந்து பால்சுரப்பதை தூண்டுவேதாடு தாய்க்கும் சேய்க்கும் இடையிலான பாசப்பினைப்பை ஏற்படுத்தும்.

ஏன் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க துவங்க வேண்டும்?

இதற்கு நான்கு முதன்மைக் காரணங்களுண்டு.

1. குழந்தை பிறந்த 30 லிருந்து 60 நிமிடங்களில் நன்கு இயல்பாக சுருசுருப்பாக இருக்கும்.

2. இந்த சமயத்தில் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.

3. குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.தாய்ப்பால் கொடுக்க நல்ல வாய்ப்பு. சீம்பால் என்பது குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து சுரக்கும் மஞ்சள் நிறமான சுரப்பு. இதில் முழுக்க குழந்தைக்கு தேவையான பாதுகாப்புப் பொருட்கள் உள்ளன. இப்பொருட்கள் குழந்தையை நோய் தாக்குவதிலிருந்து பாதுகாக்கிறது. இந்த சீம்பால் கிட்டதட்ட ஒரு நோய்தடுப்பு மருந்து போன்றது.

4. தாய்ப்பால் கொடுப்பது தாயின் மார்பகங்களில் வீக்கம் கண்டு, ஏற்படும் வலியைத் தடுக்கிறது. அதே போல் குழந்தை பேறுக்குப்பின் எற்படும் உதிரப்போக்கை குறைக்கிறது.


சிசேரியன் எனப்படும், அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தாயும், தாய்ப்பால் கொடுக்கலாம்.

இவ்வகை அறுவைசிகிச்சை தாய்பால் கொடுக்கும் தன்மையை பாதிப்பதில்லை

•இப்படிப்பட்டவர் குழந்தைப் பிறந்த (அறுவை சிகிச்சைக்குப்பின்) 4 மணி நேரம் கழித்து தாய்ப்பால் கொடுக்கலாம் அல்லது அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் அனஸ்தீசியா எனப்படும் மயக்கமருந்தின் விளைவுகளிலிருந்து சாதாரண நிலைக்கு திரும்பினவுடன் பால் கொடுக்கலாம்.

•படுத்தவண்ணமாக ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் அல்லது உட்கார்ந்த வண்ணமாக குழந்தையை தன் மார்போடு அணைத்துக் கொண்டு பால் கொடுக்களாம்.

•அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெறும் அனைத்து தாய்மார்களும் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே பிறர் உதவியுடன் வெற்றிகரமாக தன் குழந்தைகளக்கு தாய்ப்பால் கொடுக்கின்றனர்.

எவ்வளவு காலம் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்?

பிரத்தியோகமாக முதல் ஆறுமாதங்கள் தாய்பால் கொடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தாய்ப்பால் தருவதை தொடரலாம்.

தாய்ப்பால் கொடுத்தபின் மார்பிலிருந்து தாய்ப்பால் கசிந்தால் என்ன செய்யவேண்டும் ?

இது பொதுவாக அணைத்து குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனை. இது தற்காலிகமான ஒன்று.

பால்கசிவு ஏற்படின் தாயானவள் தன் முழங்கை முட்டியினால் மார்பகங்களின் பக்கவாட்டில் அழுத்தம் செலுத்த வேண்டும். இப்படி செய்வதனால் பால் கசிவு ஏற்படுவதை குறைக்கிறது.

தாயானவள் உடல்நலக்குறைவாய் காணப்படும் போது தாய்பால் கொடுக்கலாமா ?

ஆம் கொடுக்கலாம், பெரும்பாலான நோய்கள் குழந்தையை பாதிப்பதில்லை. சொல்லப்போனால் டைபாய்டு, மலேரியா காய்ச்சல், எலும்புருக்கிநோய், மஞ்சள்காமாலை அல்லது தொழுநோய் போன்ற நோய்கள் பாதிக்கப்பட்டிருப்பினும் தாய்ப்பால் தருவதை நிறுத்த தேவையில்லை.

எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது?

அம்மாவுக்கு சளி, ஜுரம் பிடித்து அதற்கான மருந்தை அவர் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறெதுவும் இல்லை. காரணம், இன்று இதற்காக வரக்கூடிய பல மருந்துகள் பாதுகாப்பானவைகயாகவே இருக்கின்றன. ஆனால், தாய் எந்த மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் (அது கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவர் பலமுறை பயன்படுத்திப் பழகிய மருந்தாக இருந்தாலும் கூட) டாக்டரின் ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்த முதல் சில நாட்களில் மார்பகக் காம்பில் (நிப்புள்) அம்மாவுக்குப் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. 

அதனால் வலி ஏற்பட்டு சிலர் குழந்தைக்குப் பால் கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிடுகிறார்கள். இப்படிச் செய்வது தவறு. தொடர்ந்து பால் கொடுக்கத் தவறினால் அம்மாவுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அதுவும் பெரிய அவஸ்தையாகிவிடும். இதனால் தாய்க்கு ஜுரம் கூட வரும். அதை கவனிக்காவிட்டால் அங்கு சீழ் உருவாகிவிடும் அபாயமும் உள்ளது.

இப்படி நீங்கள் விஷயத்தை சீழ் வரை எடுத்துச் சென்றால் அதற்கான ட்ரீட்மெண்ட் கொடுக்க, ஒரு சின்ன அறுவை சிகிச்சையேகூட செய்ய வேண்டி வந்துவிடலாம். அதனால் விஷயத்தை சீழ்வரை எடுத்துச் செல்லாமல் ஜாக்கிரதையாக செயல்படுங்கள். ஆனால் இந்த நிலையிலும்கூட அம்மா, பாப்பாவுக்கு இன்னொரு மார்பகத்தில் தொடர்ந்து பால் கொடுத்து வரலாம்.

இப்படிப் பால் கட்டிக்கொண்ட சமயங்களில் மார்பகத்தில் சுடூநீர் ஒத்தடம் கொடுத்து, கட்டிக்கொண்ட பாலைப் பீய்ச்சி எடுக்கவேண்டும். குழந்தைக்கு சரியான நேர இடைவெளிவிட்டு ஒவ்வொரு தரமும் பால் கொடுக்க வேண்டும். இப்படி பால் கொடுக்கும் நேர இடைவெளி அதிகமாகும் சமயங்களிலும் கூட சில சமயம் அம்மாவுக்குப் பால் கட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

அதேசமயம் புண்ணாகிவிட்ட நிப்புளை என்னதான் செய்வது? அந்த அவஸ்தைக்கு விடிவுதான் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது…

பாப்பாவுக்கு பால் கொடுக்காத நேரங்களில் நிப்புளில் வேஸலின் போன்ற க்ரீமைத் தடவி (டாக்டரிடம் ஆலோசனை பெற்ற பிறகு) வரலாம். பால் கொடுக்கும் சமயத்தில் மார்பகத்தை தண்ணீர் மற்றும் மைல்டான சோப்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு பாப்பாவுக்குப் பால் கொடுக்கலாம்.

குறைப் பிரசவத்தால் பிறந்த குழந்தைக்கு எப்படி பாலூட்டுவது?

ஒரு சில நேரங்களில் குழந்தை சரியாகப் பாலைக் குடிக்கத் தெரியாமல் திணறலாம். அல்லது நிப்புள் புண்ணாகிவிட்டது போன்ற சில சங்கடமான நேரங்களில் அம்மாவும் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் போகலாம். இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்வது?

மேலும் சில சமயங்களில் குழந்தை ஃப்ரீ   மெச்சூராக அதாவது, டெலிவரிக்கான தேதிக்கு வெகுநாட்கள் முன்பாகவே பிறக்கும் என்று சொல்லி இருக்கிறேன். அந்தக் குழந்தைகளை தாயிடம் உடனே கொடுத்துவிடாமல் பெரும்பாலும் இன்குபேட்டர் பெட்டியில் வைத்துதான் பராமரிப்போம். இன்னும் சில குழந்தைகள் பிறக்கும் போதே உதடு பிளந்தது போன்ற (CLEFT LIP) நிலையில் பிறக்கலாம். இப்படி சில பிரச்னைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்கச் செய்ய இதோ ஒரு வழியிருக்கு..

இதுபோன்ற சமயங்களில் பாப்பாவுக்கு Expressed Milk கொடுக்கலாம்.
இது ஒன்றும் பெரிய விஷயமில்லை… தாய்ப்பாலைத் தாயிடமிருந்து வேறு வழிகளில் எடுத்துச் சேகரித்துக் கொடுப்பதுதான்.

இதை எப்படிச் செய்வது?

தாயின் மார்பகத்திலிருந்து பாலை ஒரு சுத்தமான பாத்திரத்தில் பீய்ச்சி எடுத்து பாப்பாவுக்குக் கொடுக்கலாம். அல்லது பாலை எடுப்பதற்கென்றே இன்று மார்க்கெட்டில் விற்கக் கூடிய பிரெஸ்ட் பம்புகள் வாங்கி அதைப் பயன்படுத்தியும் பாலைச் சேகரிக்கலாம்.

இந்த பிரெஸ்ட் பம்புகள் நாமே இயக்கக்கூடிய வகையிலும், பாட்டரியால் இயங்கக் கூடியதாகவும் இருவகையாகக் கிடைக்கின்றன. இப்படி எடுக்கப்படும் பாலை மூடிபோட்டு பத்திரப்படுத்தி வைத்துக் குழந்தைக்கு அவ்வப்போது கொடுத்துவரலாம்.

இந்தப் பாலை ஃப்ரிட்ஜில் (ஃப்ரீசரில் அல்ல..) 24_48 மணிநேரம் வரைக்கும் பத்திரப்படுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கலாம்.

இன்று தாய்ப்பாலை ஃப்ரீசரில் சுமார் மூன்று மாதங்கள் வரைக்கும் கூட ஃப்ரீஸ் செய்து வைத்து, அதன் தன்மை மாறாமல் பாப்பாவுக்குக் கொடுத்து வருகின்றனர்.

ஃப்ரிட்ஜிலோ ஃப்ரீசரிலோ வைத்து பத்திரப்படுத்திய பாலைப் பாப்பாவுக்கு எப்படி சூடுபடுத்திக் கொடுப்பது?

சேமிக்கப்பட்ட பாலை நேரடியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்கக் கூடாது. அகலமான ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதை லேசாக சூடுபடுத்தி, பால் இருக்கும் பாத்திரத்தை அதற்குள் வைத்து பதமாக சூடுபடுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கவேண்டும். அந்த சூட்டையும் விரல்விட்டெல்லாம் பார்க்கக்கூடாது.

ஃப்ரீஸ் செய்த பாலை முதலில் ஐஸ்கட்டி நிலையிலிருந்து கரையவிட்டுப் பிறகு மேற்கூறிய முறையிலேயே சூடுபடுத்திக் கொடுத்தால் போதும்.

பாலூட்டும் அம்மா எல்லாவற்றையும் சாப்பிடலாமா?

குழந்தை பிறப்பதற்கு முன் குழந்தைக்கு ஆகாது என்று சொல்லி ‘அதை சாப்பிடக் கூடாது… இதை சாப்பிடக் கூடாது’ என்று வீட்டுப் பெரியவர்கள் தடை விதிப்பது வழக்கம். குழந்தை பிறக்கும் வரையில்தான் இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்று நீங்கள் நினைத்தால்.. அதுதான் தவறு! குழந்தை பிறந்த பிறகுதான் இந்தக் கட்டுப்பாடுகள் இன்றுமே அதிகமாகும்..அம்மா இளநீர் சாப்பிட்டாலோ அல்லது எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ் குடித்தாலோ குழந்தைக்கு சளி இருமல் வர வாய்ப்புள்ளது என்பார்கள். பேரீச்சம் பழம் போன்ற சில விஷயங்கள் சாப்பிட்டால் பேதியாகும் என்பார்கள். இதெல்லாம் உண்மை இல்லை.அம்மா சாப்பிடும் எந்த விதமான உணவுமே பாப்பாவுக்கு நேரிடையாக. அதாவது, அதே உணவாகச் செல்வதில்லை. அந்த உணவெல்லாம் தாயின் உடலில் செரித்து கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து மற்றும் புரதச்சத்தாகப் பிரிந்து, பிறகு உடலால் கிரகிப்படுகிறது. இந்தச் சத்துக்கள்தான் பாப்பாவுக்குப் பாலாகக் கிடைக்கிறதே ஓழிய பாலிலிருந்து அவ்வளவு சுலபமாக எல்லாம் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடாது.

அம்மாவுக்கு சில சமயம் ஏதாவது நோய் தாக்கும்போது அது பாப்பாவுக்கும் பரவுவதற்குக் காரணம், இருவரும் எந்நேரமும் ஒன்றாகவே ஒரே அறையில் இருப்பதுதான்! மற்றபடி வேறொன்றும் இல்லை.


தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகம்! குறிப்பாக முதல் நான்கு தினங்கள் கொடுக்கும் சீம்பால், குழந்தைக்கு மூளைக்காய்ச்சல், போலியோ, வயிற்றுப்போக்கு, மலேரியா போன்ற எந்த நோய்களும் வராதபடி காக்கும் நோய்த்தடுப்பு ஆற்றலைக் கொண்டது! 

தாய்ப்பாலில் கிருமிகள் இல்லை. அதனால் இதை ஃப்ரிட்ஜில் பதப்படுத்த வேண்டிய தேவை இல்லை.தாயின் மடியில் இருக்கும் குழந்தைக்கு மிகமிகச் சுலபமாக அதன் வாயருகிலேயே கிடைக்கும் இயற்கையான உணவு இது! தாய்ப்பால் கொடுப்பதால், அந்தப் பெண்ணுக்கு பிற்காலத்தில் மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைகிறது!


குழந்தைக்குப் பிரச்னை ஏற்படுத்தாத, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு தாய்ப்பால்.
தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்க்கு சொல்ல இயலாத ஒரு மன திருப்தியும், குழந்தைக்கு பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியும் உண்டாகிறது!
எப்படி தெரிந்து கொள்வது?
ஒரு குழந்தை எவ்வளவு பால் குடிக்கிறது. என்று யாரும் பார்க்க முடியாது! ஆனால் பால் குடித்தவுடன் நன்கு தூங்கினாலோ, ஆரோக்கியமாக இருந்தாலோ சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தாலோ குழந்தையின் எடை கூடினாலோ குழந்தைக்குத் தேவையான பால் கிடைக்கிறது என்று அர்த்தம்!
மகிழ்ச்சியாக பாலூட்டுங்கள்!

சில நேரங்களில் அம்மாக்களுக்கு ஏற்படும் டிப்ரஷன், எக்ஸைட்மெண்ட் போன்றவை பால் சுரப்பதைக் குறைத்துவிடும். ஆகவே குழந்தைக்கு பாலூட்டும் போது, ஒரு தாய் நன்கு வசதியாக அமர்ந்து எந்தவித மனக்குழப்பமின்றி மனதை நிம்மதியாக, மகிழ்ச்சியாக ஃபீல் செய்தபடி பாலூட்டுதல் அவசியம்.

சில குழந்தைகள், பால் குடித்து முடித்தவுடன் மார்புக் காம்பிலிருந்து வாயை எடுத்து விடும். ஆனால், சில குழந்தைகள் எடுக்காது.. அப்போது குழந்தைகளின் உதடுகளை மெதுவாக மார்பிலிருந்து நாம்தான் பிரித்து எடுக்க வேண்டும். சில குழந்தைகள், பால் அருந்தி முடித்த பின்னரும் கூட வெறுமனே மார்புக் காம்புகளைச் சப்பிக் கொண்டிருக்கும். அதற்காக வெடுக்கென்று குழந்தையைத் தாயின் மார்பிலிருந்து பிரிக்கப் கூடாது. குழந்தையின் வாய் ஓரமாக தாய் தன்னுடைய விரலை மெதுவாக வைத்துக் குழந்தையை மார்பிலிருந்து பிரித்தல் நல்ல முறையாகும்.

குறிப்பிட்ட சில மணிநேரங்களுக்கு ஒருமுறை பாலூட்டுவதைக் காட்டிலும் குழந்தை பசித்து அழும்போதெல்லாம் தாய்ப்பாலூட்டுதல் நல்லது.
சில நேரங்களில் குழந்தையின் துணிகள் ஈரமாகவோ, இறுக்கமாகவோ இருந்தாலும் குழந்தை அழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதனால் அழுகைக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு பசியால்தான் அழுகிறது எனத் தெரிந்தவுடன் பால் கொடுப்பது நல்லது.
பாலூட்டும் போது இரு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி பாலூட்டுவது அவசியம். இல்லையெனில் ஒரு பக்கம் மட்டும் பால் கட்டிக் கொள்ளும்!
குழந்தை வளர வளர 3 அல்லது 4 மணிக்கொருமுறை தாய்ப்பால் அருந்த பழகிக் கொள்ளும். பிறகு அதற்கு ஏற்ப பால் கொடுக்கலாம்!

எதை கட்டாயம் சாப்பிட வேண்டும்?

அதிகப் புரத உணவுகள், பயறு வகைகள், பால், முட்டை, தினமொரு கீரை, பழங்கள் போன்றவை சாப்பிட வேண்டும்! வெள்ளைப்பூண்டும், சுறாப்புட்டும் அதிகம் எடுத்துக் கொண்டால் பால்சுரப்பது அதிகமாகும்.
கிழங்கு வகைகள் நல்லதுதான் என்றாலும் குறைவாக சாப்பிடவும். அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு மாந்தம் வரும்!

எதை சாப்பிடக்கூடாது?

அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பொரித்தவை மற்றும் செயற்கை நிறங்கள் மற்றும் ரசாயனக் கலவை சேர்த்த உணவுகளை… குறிப்பாக குளிர்பானங்களைத் தவிர்க்கவும்.

கடைகளில் வாங்கும் பிரியாணி மற்றும், சிக்கன் 65 போன்ற அயிட்டங்கள், அதிக குளிர்ச்சி தரும் உணவுகளும் கூடாது… சீதாப்பழத்தைசுத்தமாகத் தவிர்க்கவும்.

இதை நல்லா கேட்டுக்கோ மம்மீ!
குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய்ப்பால் கொடுக்க வேண்டும்! குறிப்பாக முதல் சீம்பாலை வீணாக்கவே கூடாது!

படுத்துக் கொண்டு பால் கொடுப்பது நல்லதல்ல. இதனால் குழந்தைக்குப் புரையேறி சமயங்களில் ஆபத்தாகக் கூட முடிந்து விடும்! தவிர இதனால் குழந்தையின் காதில் சீழ் வடியவோ, எறும்பு நுழையவோ வாய்ப்பிருக்கிறது.

குறைந்த பட்சம் 6 மாதங்களுக்காவது குழந்தைக்கு தாய்ப்பால் தரவேண்டும். ஒரு வருடம் தருவது நார்மல்!

மனநோயால் பாதிப்படைந்த பெண் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு பாதிப்பு ஒன்றும் ஏற்படாது.

தாய்ப்பாலில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டின், கொழுப்புச்சத்து, கார்போ ஹைட்ரேட் போன்ற அனைத்துவகையான உயிர்ச் சத்துக்களும் உள்ளன. அதனால் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் மட்டுமே குழந்தைகள் பல பாதிப்புகளைச் சந்திக்க வேண்டி வரும்!

குழந்தையின் பசித் தேவையை அறிந்து அது அழும் போதெல்லாம் அவ்வப்போது தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். காரணம், அதன் வயிறு மிகச் சிறியது. அதற்கு அடிக்கடி பசிக்கும்.

யாரெல்லாம் பாலூட்டக் கூடாது?

மார்பகப்புற்று நோய் உள்ளவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.
எய்ட்ஸ், எச்.ஐ.வி. பாஸிட்டிவ் ஹெபடைட்டிஸ் ஏ, ஹெபடைட்டிஸ் பி. தொழுநோய், காலரா, வெறிநாய்க்கடியால், ரேபிஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகப்படியான காய்ச்சலில் அவதிப்படுபவர்கள் ஆகியோரும் குழந்தைக்கு தாய்ப் பால் தரக்கூடாது.

தாய்ப்பால் சுரக்க

குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்க என்ன செய்ய வேண்டும். இதோ ‌சில கு‌றி‌ப்புக‌ள்
வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோ‌ஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் ஒரு வேளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோக‌ஸ்ட்ரான் ஈஸ்ுட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது பெருக்குகிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.
மேலும் தினமும் சுமார் 5 அல்லது 6 கப் பால் உட்கொண்டால் தாய்ப்பால் பற்றாக் குறையே இருக்காது.

தாய்ப்பால் நன்கு சுரக்க முருங்கைக் கீரையும், பசலைக் கீரையும் உதவும்.
கேள்வரகை நன்றாக இடித்து மாவாக்கிக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு வெல்லமும், எள்ளும் கலக்கவும். இதை தினமும் காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வர, தாய்ப்பால் அதிகளவில் சுரக்கும். அதோடு, உடம்பும் ஆரோக்கியமாக இருக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கான சிறந்த உணவுகள்

1. முருங்கைக்கீரை – இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லையேல் வயிற்றுவலி வரக்கூடும்.

2. மீன், பால் சுறாப்புட்டு மிகச்சிறந்த உணவு, இதுவும், செய்த அன்று சாப்பிடுவது நல்லது, வைத்திருந்து சாப்பிடக்கூடாது குறிப்பாக பால் கொடுக்கும் பெண்கள்.

3. கீரை வகைகள் அத்தனையும் சாப்பிடலாம்.

4. பசும்பால் குறைந்தபட்சம் 500 மிலி குடிக்கவேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தளருமா?

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் சரிவதில்லை. பாலூட்டும்போது ப்ரா அணியாமல் இருந்திருக்கலாம். சில தாய்மார்கள் வெறும் நைட்டி மட்டும் போட்டு உள்ளே ப்ரா அணியாமல் விடுகின்றனர். இதனால் தான் வெகு விரைவாக மார்பகங்கள் சரிந்து விடுகின்றன. இதற்கு க்ரீம், மாத்திரை, மருந்து எதுவும் பலனளிக்காது. மாறாக அவை சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தக்கூடும். 

பிளாஸ்டிக் சர்ஜரி மட்டுமே நிரந்தரத் தீர்வு. ஆனால் அதற்கு அதிக செலவாகும். தோற்றத்தை சரிப்படுத்த வேண்டுமானால், கம்பிகள் பொருத்தப்பட்ட ப்ரா கிடைக்கிறது. அதை உபயோகிக்கலாம். காம்புகளைச் சுற்றி ஏற்படும் சுருக்கத்திற்கு தோலில் போதுமான எண்ணெய்ப் பசை இல்லாததே காரணம். விக்விட் பாரஃபி எண்ணெய் நல்ல பலனளிக்கும். இதை காலையும் மாலையும் காம்புகளைச் சுற்றித் தடவினால் நாளடைவில் சுருக்கம் மறையும்.

ட்ரூ காலர் "True Caller" - See who is calling





நம் ஸ்மார்ட் போனில், அழைப்பு ஒன்று வருகிறது. அழைக்கும் எண் நம் போனில் பெயருடன் பதியப்படாமல் இருந்தால், அழைப்பது யாரென்று தெரியாது. யாரென்று தெரிந்தால், அவர் தவிர்க்கப்பட வேண்டிய நபர் என்றால் தவிர்க்கலாம். ஆனால், எப்படி புதிய, பதியாத எண் யாருடையது என்று தெரிந்து கொள்வது? இவர்களுக்கு உதவும் வகையில், ஸ்மார்ட் போனில் இயங்கும் செயலியாக இருப்பது, “ட்ரூ காலர்” என்னும் புரோகிராம் ஆகும். இது ஆண்ட்ராய்ட், ஐபோன், விண்டோஸ் போன், பிளாக் பெரி 10 ஆகியவற்றிற்கென தனித்தனியே இதன் இணைய தளத்தில் (https://www.truecaller.com/download) தரப்பட்டுள்ளது. 200 கோடிக்கும் மேலாக, இதன் தகவல் தளத்தில் மொபைல் போன்கள் உள்ளதாக, இதன் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை “உலகின் மிகப் பெரிய டெலிபோன் டைரக்டரி” என்றும் கூறலாம். இதன் இணைய தளத்திலும், நீங்கள் மொபைல் போன் ஒன்றைக் கொடுத்து, போனுக்குரியவர் குறித்து தகவல்களைப் பெறலாம். ஆனால், நீங்கள் யாரென்பதை, கூகுள் ஐ.டி. அல்லது மைக்ரோசாப்ட் ஐ.டி. யைத் தர வேண்டியதிருக்கும்.


ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் பயனாளர்களில், 60% பேர் இந்த 'ட்ரூ காலர்' என்னும் செயலியைப் பதிந்து பயன்படுத்துவார்கள். இதுவரை பயன்படுத்தாத ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்கள், True Caller செயலியை, கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று, தரவிறக்கம் செய்து, போனில் பதிந்து பயன்படுத்தலாம். ஒருவரின் எண் இன்னாருடையது என்று முதலில் பதியப்படும் பெயரே, ட்ரூ காலரில் காட்டப்படுகிறது. அந்தப் பெயர் இந்த செயலிக்கான சர்வரில் பதியப்பட்டு, நமக்கு அழைப்பு வருகையில் காட்டப்படுகிறது. இந்த செயலியைப் பயன்படுத்தி நாம் என்ன என்ன வசதிகளைப் பெறலாம் என்று இங்கு பார்க்கலாம்.
.

அழைப்புகளைத் தடுக்க:


குறிப்பிட்ட எண்ணில் தொடங்கும் அழைப்புகளை, உங்கள் போனுக்கு வரவிடாமல் தடுக்கலாம். இதுவரை நீங்கள் அறியாத ஒருவர், புதிய எண்ணிலிருந்து உங்களை அழைத்து, தொல்லை கொடுக்கிறார் என்றால், அந்த எண்ணைக் கவனியுங்கள். அழைப்பினை நீங்கள் நிறுத்தியவுடன், உங்களுக்கு ஒரு சிறிய கட்டத்தில் ஆப்ஷன்ஸ் கிடைக்கும். அதில் இந்த குறிப்பிட்ட எண்ணிலிருந்து வரும் அழைப்புகளைத் தடுக்கும் வகையில், செட்டிங்ஸ் அமைத்துவிடலாம். அல்லது அந்த எண்ணின் முதல் நான்கு இலக்கங்களைக் கொடுத்தும் தடுக்கலாம். எடுத்துக் காட்டாக, அந்த எண் 8054ல் தொடங்குவதாக இருந்தால், இந்த நான்கு இலக்கங்களைக் கொடுத்தும் தடுக்கும் வகையில் அமைப்பினை ஏற்படுத்தலாம்.
.

இணைய இணைப்பு எப்போதும் தேவையில்லை:


உங்கள் மொபைல் போனில் வரும் அழைப்பு எண் யாருக்குரியது என்று அறிய எப்போதும் இணைய இணைப்பில் உங்கள் போன் இருக்கத் தேவையில்லை. முதல் முறை ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வரும்போதே, அந்த எண்ணுக்குரியவரின் பெயர் எங்கேனும் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதனை, ட்ரூ காலர் அறிந்து வைத்துக் கொள்கிறது. அடுத்த முறை அழைப்பு வருகையில், தன் நினைவிலிருந்தே அதனை உங்களுக்குக் காட்டுகிறது.
.

தொல்லை கொடுப்பவரிடமிருந்து பாதுகாப்பு: 


தொடர்ந்து ஓர் எண்ணிலிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் எரிச்சல் தரும் பேச்சினைத் தொடர்ந்து அளிப்பவராயின், அந்த எண்ணுக்குரியவரை spammer என அடையாளக் குறியிட்டு வைக்கலாம். இது போல ஓர் எண்ணைப் பலர் ஸ்பேம் என அடையாளம் காட்டி இருந்தால், உங்களுக்கு அழைப்பு வருகையில், இந்த எண்ணை இத்தனை சதவீதம் பேர் ஸ்பேம் என குறித்துள்ளனர் என்று தகவல் காட்டப்படும். எனவே, நீங்களும் இதனை முடக்கி வைக்கலாம்.
.

ட்ரூ டயலர்:


இதே செயலியைப் போன்று, இதனை வழங்கும் நிறுவனம், 'ட்ரூ டயலர்' என்ற (True Dialer) என்ற செயலியையும் தருகிறது. இதனை, உங்கள் போனின் டயலராக செயல்படுத்தலாம். நீங்கள் ஒருவரை அடையாளம் காட்டி அமைத்தால், நீங்கள் குறிப்பிட்ட அடையாளத்துடன், அந்த எண்ணிலிருந்து அழைப்பு வருகையில் தகவல் கிடைக்கும். வழக்கமாக, நீங்கள் டயல் செய்திடுவதனை, இந்த செயலியின் மூலமும் செயல்படுத்தலாம். 
.

எண் குறித்த தகவல்: 


ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் தான், அந்த எண்ணுக்குரியவரை அடையாளம் காட்டும் என்ற வரையறை, இந்த செயலிக்கு இல்லை. எந்த எண்ணையும் ட்ரூ காலரில் கொடுத்து, அந்த எண் யாருக்குரியது என்று நீங்கள் ட்ரூ காலர் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால், அந்த எண்ணுக்குரியவருக்கு, இந்த எண்ணிலிருந்து, உங்கள் எண் குறித்த தகவல் அறியப்பட்டது என்ற தகவல் அந்த எண் கொண்ட போனுக்குச் செல்லும்.


உங்களைப் பற்றிய தகவல் தொகுப்பு: 


ட்ரூ காலர் செயலியைப் பயன்படுத்தி, உங்களைப் பற்றிய தகவல் தொகுப்பினை உருவாக்கலாம். இதன் மூலம், நீங்கள் அழைக்கும் நபர்கள், உங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள இயலும். எடுத்துக் காட்டாக, உங்கள் முழுப் பெயர் மற்றும் படத்தினை இத்தொகுப்பில் இட்டு வைக்கலாம். அதே போல, Privacy என்ற வகையில், உங்களைப் பற்றிய தகவல்களைக் காட்டாமல் இருக்கவும் அமைக்கலாம்.


உங்கள் எண்ணை நீக்க:



ட்ரூ காலர் உங்கள் எண் குறித்த தகவல்களை யாருக்கும் காட்டக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், அதனுடைய தகவல் தொகுப்பிலிருந்து, உங்கள் எண்ணை முழுமையாக நீக்கலாம். http://www.truecaller.com/unlist என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்று, உங்கள் மொபைல் எண்ணை, இந்தியாவிற்குரிய குறியீட்டு எண்ணுடன் இணைத்து தர வேண்டும். ஏன் எண்ணை பதிவிலிருந்து நீக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான காரணத்தை, அதில் தரப்படும் ஆப்ஷன்களிலிருந்து தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். பின்னர், அதில் காட்டப்படும் 'கேப்சா (Captcha)' சோதனையை மேற்கொண்ட பின்னர், 'Unlist' என்பதில் கிளிக் செய்தால், உங்கள் எண் நீக்கப்படும். நீங்கள் அழைப்புகளை மேற்கொள்கையில், உங்கள் எண் குறித்த தகவல் ட்ரூ காலர் வழியாகத் தரப்பட மாட்டாது.

பெண் குழந்தையின் அப்பாவா நீங்கள்?...அப்போ இங்க வாங்க.


நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டு விடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள்.
அம்மாவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு அவர்கள் ஒதுங்கி விடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய் விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித் தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.

1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் மிக குறைவு.ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப் போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும் போது நிறைய விஷயங்கள் நமக்குத் தெரிய வரும்.

2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும் போது மகள் யாருடன் பழகுகிறாள். அவளுடைய நடத்தை எப்படி என்று தெரிந்து கொள்வது முக்கியம் அல்லவா?.

3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுங்கள். ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.

4. ஆண்களைப் பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!

5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள்.  வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.

6. கடை, ஷாப்பிங் என்று தாராளமாக அழைத்துச் செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் அவர் அறியட்டும். பொது இடங்களில் கடை பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக் கொடுங்கள்.

7. பெண்களென்றால் வீட்டில் தான்சாப்பிடுவார்கள் என்றில்லை. விதவிதமாக நாம் உண்பதைப் போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதே நேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பறிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்து கொள்ளட்டும்.

8. நீங்கள் எவ்வளவு தூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப் பற்றி எப்படி பெருமைப் படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.

9. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னோர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் அறியட்டும்.

10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.

11. புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப் படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப் படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டு வந்து கொடுங்கள்.

12. உடலளவிலும் ,மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக் கொடுங்கள்.

13. இன்றைய உலகம் இயந்திர மயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கு எல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆண்கள் வர வேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, வாகனங்கள் ஓட்டுவது போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள்.

14. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்!

மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள்!.

வேவு பார்க்கும் அப்பாவாக இல்லாமல் நண்பனான அப்பாவாக இருங்கள்.

எது வெற்றி !!! வெற்றி தரும் மகிழ்ச்சி !!!


4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !

8 வயதில், தனியாக வெளியே சென்று வழி   தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !

12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !

18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !

22 வயதில்,   பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால்,  அது வெற்றி !

25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !

30 வயதில்,  தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !

35 வயதில்,  போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !

45 வயதில்,  இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது  வெற்றி  !

50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !

55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !

60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என  நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !

65 வயதில், நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

70 வயதில்,   மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !

80 வயதிற்கு மேல் மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !


எளிய இயற்கை வைத்தியம்


  1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடி...யை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.


3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!


சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், 
கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும், 
கோழியிடம் இருந்து நான்கையும், 
காக்கையிடம் இருந்து ஐந்தையும், 
நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, 
நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், 
வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், 
தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், 
தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், 
தேவையான பொருள்களை சேமித்து வைத்தல்,
யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல்,
தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், 
உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், 
நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், 
தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
இது நான்  சொல்லலைங்க ..!
சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!