மிக்ஸ்டு வெஜிடபிள் தோசை! எப்படி செய்யணும் தெரியுமா?


காய்கறிகளை குழந்தைகள் சாப்பிடாது. அவர்களுக்கு எப்படி சத்தான சுவையான வெஜிடபிள் தோசை செய்வது கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்,
காய்கறிகள் (கேரட், பெரிய வெங்காயம், குடமிளகாய், பட்டாணி, பீன்ஸ் போன்றவை) நறுக்கியது - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 2,
நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
காய்கறிகள், பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு எல்லா வற்றையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி, பிறகு அரிசியையும் தண்ணீர் வடித்துச் சேர்த்து நைஸாக அரைக்கவும். 

வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்(கவனிக்க.. தண்ணீர் அதிகமாகிவிடக் கூடாது).

மாவு கெட்டியாக இருந்தால்தான் தோசை அழகாக வார்க்க வரும்).

 கல்லில் தோசையை வார்த்து, சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு திருப்பிப் போடவும்.

 குழந்தைகளுக்கு எல்லா காய்கறிகளையும் கொடுத்த திருப்தி இருக்கும்.

No comments:

Post a Comment