படம்: எந்திரன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியோர் : ஷாவித் அலி, சின்மயி
பல்லவி
ஆண் : கிளிமாஞ்சாரோ மலைக்
கனிமாஞ்சாறோ கன்னக்
குழிமாஞ்சாரோ யாரோ யாரோ
குழு : ஆகாஆகா ஆகாஆகா
ஆண் : மொகஞ்சதாரோ உன்னில்
நொழஞ்சதாரோ பைய்ய
கொழஞ்சதாரோ யாரோ
யாரோ
குழு : ஆகாஆகா ஆகாஆகா
பெண் : காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தால வேகவச்சு
சிங்கப்பல்லில் உறிய்யா..
குழு : ஆகாஆகா ஆகாஆகா
பெண்: மலைப்பாம்பு
போலவந்து
மாங்குட்டியப் புடிய்யா
சுக்குமிளகு தட்டியயன்ன
சூப்புவச்சுக் குடிய்யா.,
குழு : ஆகாஆகா ஆகாஆகா
ஆண் : ஏவாளுக்குத் தங்கச்சியே
யேங்கூடத்தான் இருக்கா
ஆளுயர ஆலிவ் பழம்
அப்படியே எனக்கா
அக்கக்கோ அடி கின்னிக்கோழி
அப்பப்போ யயன்னபின்னிக்கோடி
இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி!
சரணம் 1
ஆண் : கொடிப்பச்சையே
எலுமிச்சையே
உன்மேல் உன்மேல்
உயிர் இச்சையே!
பெண் : அட நூறுகோடி தசை
ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை!
ஆண் : இனிச்சக்கீரே
அடிச்சக்கரே
மனச ரெண்டா
மடிச்சுக்கிரே
பெண்: நான் ஊற வைத்தக்
கனி
என்னைமெல்ல
ஆற வைத்துக் கடி!
ஆண் : வேர்வரை நுழையும்
வெயிலும் நான் நீ
இலைத்திரை ஏன் இட்டாய்?
பெண் : உத ட்டையும் உதட்டையும்
பூட்டிக்கொண்டு ஒரு
யுகம் முடித்து திற
அன்பா!
சரணம் 2
பெண் : சுனைவாசியே
சுகவாசியே
தோல் கருவி
எனைவாசியே!
ஆண் : நீ தோல் குத்தாத
பலா
றெக்கைக்கட்டி
கால்கொண்டாடும் நிலா!
பெண் : மரதேகம் நான்
மரங்கொத்தி நீ
வனதேசம் நான்
அதில் வாசம் நீ!
ஆண் : நூறு கிராம்தான் இடை
உனக்கு இனி
யாரு நான்தான் உடை!
பெண் : ஐந்தடி வளர்ந்த
ஆட்டுச்செடி என்னை
மேய்ந்துவிடு மொத்தம்
ஆண் : பச்சைப் பசும்புல்
நீயானால் புலி
புல்தின்னுமே என்ன குத்தம்
No comments:
Post a Comment