# கதை எழுதுவது பற்றி எழுத்தாளர் சுஜாதா அவர்களின் வாக்குமூலம் :
"ஒரு காலகட்டத்தில் சிறுகதை எழுதுவதற்குக் கொஞ்சநேரம் யோசித்தால் போதும். அதன்பின் எழுதுவதற்கு, பழக்கத்தால் சிரமமே இருந்ததில்லை. சில கதைகளை நான் எழுதாமல் அவை என்னை எழுதிக்கொண்டு சென்றன என்றுகூடச் சொல்லலாம்..!
மீண்டும் படைப்பாற்றலின் ஊற்றுக்கண்ணை யோசிக்கத் தோன்றுகிறது. என்னை எழுத வைப்பது, வைத்தது எது என்று யோசிக்கையில் இரண்டு அம்சங்கள் அவசியமாகத் தெரிகின்றன.
முதலில் சுயபரிசீலனை;விமர்சனம்.
எழுதிவிட்டுப் படித்துப் பார்க்கும்போது சரியில்லை என்றால், கிழித்துப் போட நான் தயங்கியதே இல்லை. முதல் வாசகனான என்னை மீறி, எந்தக் கதையும் சென்றதில்லை. எப்போது பாசாங்காக எழுதுகிறேன் என்பது எனக்கே புரிந்து விடும்.
இரண்டாவது, மொழியின்மேல் ஒரு பற்று என்பதைவிட,ஈடுபாடு என்று சொல்லலாம். தமிழ் நடையில் சில சுதந்திரங்களை எடுத்துக் கொள்ளும்முன், தமிழை ஒழுங்காக அறிந்தவனாக என்னை ஆக்கிக்கொண்டு அந்தச் சுதந்திரத்தில் குற்றஉணர்ச்சி ஏதுமில்லாமல் பார்த்துக் கொண்டது. தமிழ் இலக்கியம் அறிந்தபின், இலக்கணம் மீறும் புதுக் கவிஞர்கள் போல நல்ல தமிழை அறிந்து அதன்பின் அதில் சில சலுகைகள் எடுத்துக்கொண்டேன்.
மேலும், உள்மனதில் ஓர் எண்ணத்தொடர் எழுத்தாளனுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். எந்த சம்பவத்தைப் பார்த்தாலும், எந்தச் சம்பாஷணையைக் கேட்டாலும், இதில் ஒரு கதை இருக்கலாம் போல ஒரு தனிப்பட்ட யோசனை.
சிலசமயம் இந்த உப எண்ணங்கள்....உப கவனம் இழப்பாகக்கூட இருக்கும். எதையும் வைத்துக் கதை பண்ண முடியும் என்கிற தன்னம்பிக்கை, சில சம்பவங்களின் தாக்கத்தை மழுப்பி விடும் அபாயம் உள்ளது. இதைப் போல் எழுத்தாளர்களுக்கு பல இழப்புகள் உண்டு....!!!"

No comments:
Post a Comment